வெளியானது உள்ளூராட்சி சபைத் தேர்தல் தினம் தொடர்பான அறிவிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மே மாதம்-06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை (20.03.2025) தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.