சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்திற்குள் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் முழுமையான ஆதரவுடன் மேலுமொரு புதிய மண்டபம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23.03.2025) முற்பகல்-10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து நேற்றுக் காலை-06.30 மணி முதல் நண்பகல்-12 மணி வரை திஸ்ஸ விகாரைக்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்டர், ஜனநாயகத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் நாவலன், கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என்.இன்பம் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டவிரோத விகாரையை உடனே அகற்று!, தையிட்டி தமிழர் சொத்து! உள்ளிட்ட தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான பல்வேறு கோஷங்களை எழுப்பியும், பல சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
சட் டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மாதாந்தம் பெளர்ணமி தினத்தில் போராட்டம் நடாத்தி வருகின்றோம்.
போராட்டம் வலுப்பெற்ற நிலையில் இந்த மாதம்- 20 ஆம் திகதி புத்தசாசன மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சரான சுனில் சேனவி எங்களைக் கொழும்புக்கு அழைத்துக் கலந்துரையாடலொன்றை
இந்தக் கலந்துரையாடலின் போது எமது காணி உறுதிப் பத்திரங்களை அவரிடம் சமர்ப்பித்திருந்தோம். அவற்றைப் பார்வையிட்ட புத்தசாசன அமைச்சர் இந்த விடயம் தங்கள் அமைச்சுக்கு மட்டும் பொறுப்பான விடயமல்ல. காணி அமைச்சுக்கு பொறுப்பான விடயம். அவர்களும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த விவகாரம் தொடர்பில் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனக் குறிப்பிட்டி
எனவே, தற்போதைய அநுர அரசின் இரட்டை வேடத்தை மக்களனைவரும் உணர்ந்து எமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.