எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கான சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
பல்வேறுபட்ட இடங்களில் அதிகரிக்கப்பட்ட விலைகளின் கீழ் சில வர்த்தகர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் அரிசியினை விற்பனை செய்வதாகவும், அரிசி தொகையைப் பதுக்கி வைப்பதாகவும் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ள நிலையிலேயே இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.