வரலாற்றுப் பிரசித்திபெற்ற மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா சனிக்கிழமை(22.03.2025) நண்பகல்- 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் 25 தினங்கள் மஹோற்சவப் பெருந் திருவிழா காலை, மாலை உற்சவங்களாகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இவ் ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-31 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-07 மணியளவில் மஞ்சத் திருவிழாவும், அடுத்தமாதம்- 10 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-07 மணியளவில் கைலாசவாகனத் திருவிழா வும், 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு-07.30 மணியளவில் சப்பரத் திருவிழாவும், சித்திரைப் புத்தாண்டு நாளான 14 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல்-12 மணியளவில் தேர்த் திருவிழாவும், 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-09.30 மணியளவில் தீர்த்தத் திருவிழாவு ம், அன்றையதினம் மாலை-05 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென மேற்படி ஆலயத் தர்மகர்த்தா சபையினர் தெரிவித்துள்ளனர்.