சந்நிதியான் ஆச்சிரமத்தில் மாதாந்தத் திருவாசக முற்றோதல்

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தத் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு அண்மையில் காலை-07.30 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது.  

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் கலந்து கொண்டு திருவாசக முற்றோதல்  நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.  அடியவர்கள் பலரும் கலந்து கொண்டு தித்திக்கும் திருவாசகத்தை முற்றோதினர். விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.