வடக்கில் பொருளாதாரம், கல்வியை மேம்படுத்தினால் ஏனைய பிரச்சினைகள் தீர்ந்து விடும்: மூத்த இராஜதந்திரி நடராஜன் கருத்து!

வடக்கில் பொருளாதாரம், கல்வி, விளையாட்டு போன்ற துறைகளை மேம்படுத்தினால் ஏனைய பிரச்சினைகள் அனைத்தும் தானாகவே தீர்ந்துவிடும். இதற்குத் தமிழ்மக்கள் மத்தியிலுள்ள சமூக நலனில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென இந்தியாவின் மூத்த தமிழ் இராஜதந்திரிகளில் ஒருவரான ஆ.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று சனிக்கிழமை (29.03.2025) யாழ்.வருகை தந்துள்ள அவர் இன்று மாலை செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தெல்லிப்பழையில் அமைந்துள்ள தந்தை செல்வா இல்லத்தில் இடம்பெற்ற சமகால அரசியல்- பொருளாதார நிலைமைகள் தொடர்பான சிறப்புக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

தந்தை செல்வா நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான இ.பேரின்பநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.