சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குருதிக் கொடை முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை (05.03.2025) காலை-09 மணி முதல் யாழ்.திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானம் வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.