எழுத்தாளர் சாந்தனின் "சிறையல்ல இது சிறப்புமுகாம்" கவிதைநூல் தமிழ்நாட்டில் வெளியீடு

 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு 33 வருடங்கள் தாயக மண்ணிற்காக சிறை தண்டனை அனுபவித்து இறைபதமடைந்த திரு. தில்லையம்பலம் சுரேந்திரராஜா - சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டிலும் அனுட்டிக்கப்பட்டது.  


சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி அவரின் படத்திறப்பும் தேனீ பதிப்பகம் தொகுத்த சாந்தனின் "சிறையல்ல இது சிறப்புமுகாம்" என்கிற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வும் நிறைவாக நடந்து முடிந்தது.


தோழர் தமிழ்நேயன் தமிழ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  வழக்கறிஞர்  புகழேந்தி பாண்டியன்  நூலை வெளியிட வழக்கறிஞர்  அலைமகன் ஜான்சன் பெற்றுக் கொண்டார்.


இந்நிகழ்வில் தமிழின ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.