யாழ்.புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டியும் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வும் நாளை வியாழக்கிழமை (06.03.2025) பிற்பகல்-01 மணியளவில் பாடசாலை அதிபர் சி.சிவகுமார் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோமசுந்தரம் இராமநாதன் பிரதமவிருந்தினராகவும், வலிகாமம் வலய உடற்கல்விப் பாட சேவைக்கால ஆசிரியர் மேஜர் ந.கஜேந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.