திருவண்ணாமலையில் யாழ்ப்பாணத்துச் சித்தர்களின் திருவுருவப்படங்கள் வைத்துத் தினமும் வழிபாடு

யாழ்ப்பாணம் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் இந்தியாவின் திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் திருமடத்தில் மடாதிபதியின் அனுமதியுடன் ஈழத்துச் சித்தர்களான யோகர் சுவாமிகள், யோகர் சுவாமிகளின் குருவான செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகளின் சீடர்களான சுப்பிரமுனிய சுவாமி, நரிக்குட்டி சுவாமிகள் ஆகியோரின் திருவுருவப் படங்கள் நேற்றுத் திங்கட்கிழமை (03.03.2025) வைக்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் ஆற்றப்பட்டன.  

இங்கு தினமும் பூசை வழிபாடுகள் நிகழ்த்தப்படவுள்ளதுடன் யோகர் சுவாமிகளின் குருபூசை தினமான ஆயிலிய நட்சத்திர நன்னாளில் சிறப்பு வழிபாடுகள் நடாத்தவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சைவப்பிரகாசப் பேரவையின் செயலாளர் வே.சிவகுருநாதன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.