கோண்டாவில் குட்டிச்சுட்டி முன்பள்ளியின் விளையாட்டு விழா

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீஅற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும், குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் குட்டிச்சுட்டி முன்பள்ளியின் விளையாட்டு விழா-2025 இன்று ஞாயிற்றுக்கிழமை (23.03.2025) பிற்பகல்-02 மணி முதல் மேற்படி முன்பள்ளி முன்றலில் நிலையத் தலைவர் து.சுதன் தலைமையில் நடைபெறவுள்ளது. 

நிகழ்வில் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் பிரதம விருந்தினராகவும், இலங்கை மின்சாரசபையின் யாழ்.புறநகர் மின் அத்தியட்சகர் நாகேந்திரராஜா நக்கீரன், வேலணைப் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி.மயில்வாகனம் கபிலன், ஓய்வுநிலை அதிபர் சண்.வாமதேவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். 

மேற்படி விழாவில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.