இன்று திங்கட்கிழமை(31.03.2025) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 299 ரூபாவுக்கும், ஒக்டேன் 95 ரகப் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 361 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
எனினும், ஓட்டோ டீசல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் மாற்றமின்றித் தொடருமென இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.