முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்!       

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (01.04.2025) ஆரம்பமாகியுள்ளது. 

முதலாம் தவணையின் முதலாம் கட்டம் மார்ச் மாதம்- 14 ஆம் திகதி நிறைவடைந்தது. மார்ச் மாதம்- 17 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டது.

இதேவேளை, நோன்புப் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு நாட்டில் அமைந்துள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.