ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களைச் சாதாரணமாகக் கூறி இரண்டரை வயதேயான சிறுமியான தென்மராட்சி சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா அசத்தியுள்ளார்.
மேற்படி சிறுமியின் குறித்த அசாத்தியத் திறனைக் கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களைத் தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாகக் கூறி அசத்துகின்றார்.
சிறுமியின் தந்தையார் முச்சக்கர வண்டி ஓட்டுனராகவும், தாயார் குடும்பப் பெண்மணியாகவும் உள்ளனர்.
குறித்த சிறுமிக்கு இதுவரை ஏடு தொடக்கப்படாத நிலையில் இவ்வாறு அதிசிறந்த ஞாபக சக்தியைக் கொண்டுள்ளமை பலரையும் வியக்க வைத்துள்ளது.