சுன்னாகம் தாளையடி அரிகரபுத்திர ஐயனார் பெருவிழா ஆரம்பம்

பழமைவாய்ந்த சுன்னாகம் தாளையடி ஸ்ரீ அரிகரபுத்திர ஐயனார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (01.04.2025) காலை-09.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  

தொடர்ந்தும் 13 தினங்கள் இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ளன.  


                          
எதிர்வரும்-06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-04 மணியளவில் ஆலயத் திருக்கேணியில் வசந்தோற்சவமும், 07 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல்-12 மணியளவில்  புனரமைக்கப்பட்ட ஆலயத்தின் பழமை வாய்ந்த சித்திரத் தேரின் வெள்ளோட்டமும், அன்றையதினம் மாலை காமதேனு கற்பகக் காட்சியும், 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை வேட்டைத் திருவிழாவும், 09 ஆம் திகதி புதன்கிழமை மாலை-06.30 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-08.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள்-11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-08.30 மணியளவில் தீர்த்தவாரிக் காட்சியும், மாலை-06.30 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.