உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தமிழர் ஒன்றியத்தின் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (02.04.2025) பிற்பகல்-02 மணி முதல் கோண்டாவில் மேற்கில் அமைந்துள்ள ஐக்கியதமிழர் ஒன்றியத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஐக்கியதமிழர் ஒன்றியத்தின் தலைவர் என்.சிறீந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.