தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்தும் நூறு மலர்கள் மலரட்டும் எனும் தொனிப் பொருளிலான 24 ஆவது புத்தக அரங்க விழா இன்று வெள்ளிக்கிழமை (28.03.2025) மாலை யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியில் ஆரம்பமானது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (30.03.2025) வரையான மூன்று தினங்கள் புத்தக அரங்க விழா தொடர்ந்தும் நடைபெறும்.
மூன்று தினங்களிலும் மாலை-03.30 மணியளவில் ஈழத்து நூல்களின் அறிமுகமும் இலக்கியக் கலந்துரையாடலும் இடம்பெறும்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை-05 மணியளவில் எங்கே? எங்கே? குடை எங்கே?, எங்கே போனார் எலியார்? ஆகிய சிறுவர் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. நாளை சனிக்கிழமை மாலை-05 மணியளவில் பட்டறிவு, முட்டை ஆகிய சிறுவர் நாடகங்களும், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை தலையெழுத்து, பட்டுவேட்டிக் கனவு ஆகிய நாடகங்களும் இடம்பெறும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை மாபெரும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நிகழ்வு ஏற்பாடாகியுள்ளதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.