முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்குப் பிரித்தானியா தடை விதித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியுள்ளவர்களாகத் தெரிவித்து முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானியும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தடைகள் விதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
இதற்கமைய இவர்கள் நால்வரும் பிரித்தானியாவுக்கான பயணங்களை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சொத்துக்களைச் சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.