கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் தாய், தந்தை, பேரன், பேர்த்தி போன்ற குடும்ப அங்கத்தவர்களின் கண்காணிப்பு, காத்திரமான பாதுகாப்பு மற்றும் அன்பான கட்டளை இருந்ததால் சிறந்த குடும்பம் இருந்தது. தற்போது எமது சமுதாயமானது கூட்டுக குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறது என யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் தெரிவித்துள்ளார்.
பால்நிலை வன்முறை மற்றும் 1938,1929 உதவித் தொலைபேசி சேவைகள் தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு புதன்கிழமை (26.03.2025) யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை இல்லாமலிருப்பதால் குடும்பத்தில் அமைதியின்மை மற்றும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றது. இதற்குத் தொழில்நுட்ப அதீதப் பாவனையும் கூட காரணமாக அமைந்துள்ளது. எமது பண்பாடுகள் மற்றும் கலாசாரத்தினை விட்டு நாம் விலகிச் செல்வதும் இதற்குக் காரணமாக அமைகிறது.
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான இவ் விழிப்புணர்வுச் செயற்பாட்டின் மூலம் சமுதாயத்தில் நடக்கும் பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான கருத்தினையும், அதற்கான 1938,1929 இலக்க உதவித் தொலைபேசிச் சேவைகளையும் அறிந்து கொள்ளவும், ஏனையவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் உதவும் என்றார்.