உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான 20 எழுத்தாணை மனுக்கள் தள்ளுபடி!

உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக  அரசியல் கட்சிகள் மற்றும் சில சுயேட்சை குழுக்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த சுமார் 20 எழுத்தாணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் திங்கட்கிழமை (21.04.2025) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட ​போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.