துல்லிய தகவலால் ஐந்து தடவைகள் காப்பாற்றப்பட்ட என் உயிர் : சிவாஜிலிங்கம் பரபரப்புத் தகவல்!


வன்னியில் போர் நடந்த காலப் பகுதியில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுத் துறையால் எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமையால் தான் பலர் இன்று உயிர் தப்பியிருக்கின்றோம்.  ஐந்து தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுத் துல்லியமாக அவர்கள் வழங்கிய தகவலால் தான் என் உயிர் காப்பாற்றப்பட்டது எனத் தமிழ்த்தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.   

சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாமனிதர் விருது வழங்கிக் கௌரவமளிக்கப்பட்டவருமான மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தலும் நினைவுப் பேருரை நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (20.04.2025) மாலை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.