வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா 50 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும்- 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-08.07 மணி தொடக்கம் முற்பகல்-10.09 மணி வரையுள்ள சுப வேளையில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (04.04.2025) அதிகாலை-04.32 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.