குப்பிழான் கேணியடி ஞானவைரவர் அலங்கார உற்சவம் நேற்று வியாழக்கிழமை (03.04.2025) மாலை-06.30 மணியளவில் ஆரம்பமானது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் அலங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெறும். 10 ஆம் நாளான எதிர்வரும்-12 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் அபிஷேகம், பூசை, வசந்தமண்டபப் பூசை, திரு ஊஞ்சலைத் தொடர்ந்து வைரவர் வீதி உலா வரும் திருக்காட்சி, மகேஸ்வர பூசை (அன்னதானம்) என்பன இடம்பெறும். மறுநாள்-13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் 108 சங்காபிஷேகம், வசந்தமண்டபப் பூசை, அன்னதானம் என்பன இடம்பெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.