ஈழத்துச் சித்தர் பரம்பரையில் முக்கியமானவராகத் திகழும் தவத்திரு.யோகர் சுவாமிகளின் 61 ஆவது ஆண்டு குருபூசை நிகழ்வுகள் பங்குனி ஆயிலிய நன்னாளான நாளை திங்கட்கிழமை (07.04.2025) யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குருபூசை நாளின் முக்கிய நிகழ்வு நாளை காலை-09 மணியளவில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை யோகர் சுவாமிகள் சமாதி ஆலயத்தில் யோகர் சுவாமிகளுக்கு விசேட அபிஷேக ஆராதனை வழிபாடுக ள் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட நற்சிந்தனைப் பாராயணப் போட்டியிலும், பேச்சுப் போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெறுமென நிகழ்வின் ஒருகிணைப்பாளரும், ஆசிரியருமான செ.லோகேஸ்வரன் தெரிவித்தார்.