அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலி: சர்வகட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு!

                       

அமெரிக்காவின் வரி விதிப்புத் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சிக் கூட்டமொன்று இன்று வியாழக்கிழமை(10.04.2025) முற்பகல்-11 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது அமெரிக்காவின் வரி அறிவிப்புத் தொடர்பாக அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்குத் தெளிவுப்படுத்தப்படவுள்ளது.    

இதேவேளை, அமெரிக்காவின் வரி விரிப்புத் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.