ஏழாலை இலந்தைகட்டி பாதாள ஸ்ரீ ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை வெள்ளிக்கிழமை (11.04.2025) காலை-09.06 மணி தொடக்கம் முற்பகல்-10.05 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் கடந்த திங்கட்கிழமை (07.04.2025) காலை ஆரம்பமாகியது. இந் நிலையில் இன்று வியாழக்கிழமை (10.04.2025) காலை-09 மணி தொடக்கம் மாலை-03 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தினர்.