வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துா்க்காதேவி ஆலய மகா கும்பாபிஷேக நாளினை முன்னிட்டு மணவாளக் கோலத் திருவிழா பங்குனி உத்தர நன்னாளான நாளை வெள்ளிக்கிழமை (11.04.2025) சிறப்பாக நடைபெறவுள்ளது.
நாளை அதிகாலை-04.30 மணியளவில் உஷக்காலப் பூசையும், அதிகாலை-05 மணியளவில் விசேட சந்தியும், யாக பூசையும், சங்குபூசையும் நடைபெறும். காலை-06 மணியளவில் திராவியாபிஷேகமும், காலை-07 மணியளவில் சங்காபிஷேகமும், காலை-08 மணியளவில் காலைச் சந்திப் பூசையும், முற்பகல்-11 மணியளவில் உச்சிக்கால விசேட பூசையும் இடம்பெறும்.
நாளை மாலை-04 மணியளவில் சாயரட்சைப் பூசை நடைபெற்று மாலை-04.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை, திருவூஞ்சலைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதியில் எழுந்தருளி அதனைத் தொடர்ந்து அழகிய பூந்தண்டிகையில் வெளிவீதி உலா எழுந்தருளி உலா வரும் திருக்காட்சியும் இடம்பெறும்.