உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டுத் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக் கூட்டம் வியாழக்கிழமை (17.04.2025) பிற்பகல்-02 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள கிட்டுப் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார். இந் நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் அவர் சில முக்கிய அறிவிப்புக்களையும் வெளியிடவுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.