யாழ்.இந்துக் கல்லூரியில் இரத்ததான நிகழ்வு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கான விளையாட்டு மையமான ஜொலிஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்தும் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை (12.04.2025) காலை-09 மணி முதல் மதியம்-01 மணி வரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானம் வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.