காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும் நூல் வெளியீட்டு விழா

கிராமிய உழைப்பாளர் சங்கம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இணைந்து நடாத்தும் மரியநாயகம் நியூட்டன் எழுதிய "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்" நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை (19.04.2025) முற்பகல்-10 மணியளவில் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என்.இன்பம் தலைமையில்  இடம்பெறவுள்ளது.