திருநெல்வேலியில் இரத்ததான முகாம்

ஸ்ரீ சத்தியசாயி சுவாமிகளின் நூறாவது அவதார தினத்தை முன்னிட்டு வடபிராந்திய சத்தியசாயி சர்வதேச நிறுவனத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (06.04.2025) காலை-08.30 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை திருநெல்வேலியில் அமைந்துள்ள சத்தியசாயி சேவா நிலையத்தில் நடைபெறவுள்ளது. 

தாங்கள் வழங்கும் இரத்தம் பல நோயாளர்களின் உயிரைக் காக்க வல்லது. எனவே, விலைமதிப்பற்ற உயிரைக் காக்க வல்ல இரத்ததானத்தை தானம் செய்யும் குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் தவறாது கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.