கடந்த காலங்களிலும் பல சந்திப்புக்கள் நடைபெற்றாலும் அடுத்த கட்டத்துக்கு அவை நகர்ந்திருக்கவில்லை எனத் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதலீட்டாளர்கள் உள்ளூர் அதிகாரிகள் தமது முதலீட்டு முயற்சிக்கான போதிய ஒத்துழைப்புக்களை வழங்க மறுப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.
இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (04.04.2025) யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது ஆரம்பித்துள்ள தமது முயற்சியில் இவ்வாறான கசப்பான சம்பவங்கள் நடைபெறாது எனவும், அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள மூன்று முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் நிச்சயம் இயங்குமெனவும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் உறுதியளித்தார்.