யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் பொன் விழாவை முன்னிட்டுக் கலைப்பீடப் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (27.04.2025) காலை-09 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பிரதான வளாக மாணவர் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் உடலியல் தகவும், உயிர்காக்கும் விருப்பும் கொண்ட கொடையாளர்களைக் கலந்து கொண்டு உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.