யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 55 மாணவர்கள் 3 ஏ சித்தி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இதற்கமைய உயிரியல் விஞ்ஞானத்தில் மாவட்ட நிலையில் 1 , 2, 3, 4 இடங்களை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதுடன் வர்த்தகத்தில் மாவட்ட நிலையில் முதலிடத்தையும், பொறியியல் தொழில்நுட்பத்தில் மாவட்ட நிலையில் முதலிடத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
பெளதீக விஞ்ஞானத்தில் மாவட்ட நிலையில் இரண்டாமிடத்தையும், உயிர் முறைமைகள் தொழில்நுட்பத்தில் மாவட்ட நிலையில் இரண்டாமிடத்தையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் தமதாக்கிக் கொண்டுள்ளனர்.