கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளின் தாயார் தனது 92 ஆவது வயதில் இறைபதமெய்தினார். இந்நிலையில் நல்லூரில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27.04.2025) சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நல்லூர்த் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வில் அவருக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சைவப்பிரகாசப் பேரவையின் செயலாளர் வேலுப்பிள்ளை சிவகுருநாதன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.