உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர். சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பெறுபேறுகளை வெளியிடும் போது உரிய நபரின் சுட்டெண் வேறு நபர்களிடம் சென்றடைவதால் அதனைக் கொண்டு வேறு நபர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படும். அதனைக் கணனி முறைமையிலிருந்து அகற்றி உரிய நபர்கள் விண்ணப்பிப்பதற்கு மீள ஏற்பாடுகள் செய்வதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே, உயர்தரப் பெறுபேறுகளை சமூகவலைத் தளங்களில் பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.