யாழ்.பல்கலைக்கழகத்தில் மூத்த ஊடகவியலாளரின் நூல் அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஊடகக் கழகம் நடாத்தும் மூத்த ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தாவின் "உங்களை வெளிப்படுத்துங்கள்" எனும் நூலின் அறிமுக நிகழ்வு நாளை புதன்கிழமை (09.04.2025) மாலை-03 மணி முதல் மாலை-04.30 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடக் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.        

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கழகத் தலைவர் தங்கராசா விதுஷன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் நூல் அறிமுகவுரை, நூல் வெளியீடு, நூல் பற்றிய மாணவர்கள் பார்வை மற்றும் நூலாசிரியரின் ஏற்புரை என்பன நடைபெறும்.