தமிழ்- சிங்களப் புத்தாண்டை முன்னிட்டுச் சாவகச் சேரிப் பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடாத்தும் சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் நிகழ்வு இன்று புதன்கிழமையும் (09.04.2025), நாளை வியாழக்கிழமையும் (10.04.2025) காலை-09.30 மணி முதல் சாவகச்சேரி நகராட்சி மன்றப் பொன்விழா மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.