பிள்ளையானின் கைதுக்கு காரணம் இதுதான்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்றுச் செவ்வாய்க்கிழமை (08.04.2024) இரவு மட்டக்களப்பில் அமைந்துள்ள  அவரது அலுவலகத்தில் வைத்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் இன்று அதிகாலை அவர் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். நபரொருவர் கடத்தப்பட்டுக்  காணாமல் போனமை குறித்த விசாரணைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.