மக்கள் வசிக்காத தீவுகளின் மீதும் அமெரிக்கா வரி!

மக்கள் வசிக்காத பென்குயின்கள் மற்றும் கடல் சிங்கங்கள் மாத்திரம் வசிக்கும் தீவுகளின் மீது வரி விதிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட தீர்மானத்திற்கு அந் நாட்டின் வர்த்தகச் செயலாளர் ஆதரவு வழங்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது 10 வீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்காவுக்குள் பொருட்கள் கொண்டு வரப்படுவதைத் தடுப்பதற்காகவே மக்கள் வசிக்காத தீவுகள் மீதி வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.