எதிர்வரும் மே மாதம்-05 ஆம் திகதி திங்கட்கிழமை, 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிசபைத் தேர்தல் காரணமாகவே இந்த விடுமுறை வழங்கப்படுவதாகக் கல்வி அமைச்சு இன்று வியாழக்கிழமை (24.04.2025) தெரிவித்துள்ளது.