ஞானச்சுடர் சித்திரை மாத வெளியீடு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஞானச்சுடர் சஞ்சிகையின் 328 ஆவது சித்திரைமாத இதழ் வெளியீடும், மாணவர்களுக்கான புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வும் நாளை வெள்ளிக்கிழமை (25.04.2025) முற்பகல்-10.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் ஓய்வுநிலைக் கிராம அலுவலர் க.ஶ்ரீஸ்கந்தராசா சஞ்சிகையின் வெளியீட்டுரையையும், மூத்த சட்டத்தரணியும், பதில் நீதிவானுமான சோ.தேவராஜா மதிப்பீட்டுரையையும் ஆற்றவுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கலும், மாணவர்களுக்கான புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கலும் இடம்பெறுமென ஆச்சிரம முதல்வர் தெரிவித்துள்ளார்.