முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கடுழியச் சிறைத் தண்டனை!

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம் ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனியும், முன்னாள் பிரத்தியேக செயலாருமான சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று புதன்கிழமை (02.04.2025) 16 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் தலா இரண்டு லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு காலப் பகுதி வரை எஸ்.எம் ரஞ்சித் சமரகோன் வடமத்திய மாகாணத்தின் முதலமைச்சராகச் செயற்பட்ட வேளை சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவைப் பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாகப் பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக 06 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து குறித்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.