அலங்கார நாயகனாக குப்பிழான் கேணியடி ஞானவைரவர் வீதி உலா

குப்பிழான் கேணியடி ஞானவைரவர் அலங்கார உற்சவத்தின் பத்தாம் நாள் உற்சவம் கடந்த சனிக்கிழமை(12.04.2025) வெகுசிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.  

முற்பகல்-10.30 மணியளவில் அபிஷேகம், பூசை, வசந்தமண்டபப் பூசை, திரு ஊஞ்சலைத் தொடர்ந்து ஞானவைரவப் பெருமான் அடியவர்கள் புடைசூழ, மங்கள வாத்திய முழக்கத்துடன் அலங்கார நாயகனாக வீதி உலா வரும் திருக்காட்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) இடம்பெற்றது.  

நூற்றுக்கும் மேற்பட்ட அடியவர்கள் இவ் ஆலயத்தின் பத்தாம் நாள் உற்சவத்தில் கலந்து கொண்டனர்.