உள்ளுராட்சி சபைகளின் ஆட்சிக் காலம் ஜூன்-02 ஆம் திகதி ஆரம்பம்!

161 உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு அச்சிடுவதற்கான விபரங்கள் அரச அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

சிக்கலுக்குரிய 178 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த கட்டத்தில் வெளியிடப்படுமெனவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.