வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலய சித்திராப் பௌர்ணமி விரதச் சிறப்பு பூஜை வழிபாடுகள் நாளை திங்கட்கிழமை (12.05.2025) காலை-08.30 மணியளவில் அபிஷேக வழிபாடுகளுடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து சித்திரகுப்த நாயனார் புராண படனம் படிக்கப்படும். முற்பகல்-10.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து நகுலேஸ்வரப் பெருமான் இடப வாகனத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார். இறுதியாக மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) நடைபெறும்.