உலகப் பேறுகால உளநல வாரம் 07 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது. நிறைவு நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை (11.05.2025) காலை-09 மணியளவில் "பேசாததைப் பேசுவோம்" எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
பேறுகால உளநலம் சார்ந்து பல்வேறு கோணங்களில் பலர் உரையாற்றவுள்ளனர். இந் நிகழ்வில் உளமருத்துவ நிபுணர் எஸ்.சிவதாஸ் எழுதிய "பேறுகால உளநலம்" எனும் நூல் வெளியீடும் நடைபெறும். நாளை காலை-08 மணியளவில் விழிப்புணர்வு நடைபவனியானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணப் பொதுநூலகத்தைச் சென்றடையவுள்ளது .
இந் நிகழ்வில் தமிழர் பொருண்மியம் ஆசிரியர் திருமதி.ஞானரூபன் கவி பிரதம விருந்தினராகவும், மூத்த உளவளத் துணையாளர் திருமதி.கோகிலா மகேந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிறுவர் உளநலப் பிரிவான அரும்புகள் அமைப்பு குறித்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.