2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தினால் இனப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவேந்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று புதன்கிழமை (14.05.2025) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பிரதான வளாகத்தில் நடைபெறும்.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.