இந்த வருடத்திற்குள் மீனவர் ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக கடற்தொழில் அமைச்சுத் தெரிவித்துள்ளது.
மீன்பிடிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு உபகுழு அண்மையில் நியமிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.