அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினரால் இம் மாதம்-16 ஆம், 17 ஆம், 18 ஆம் திகதிகளில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சைவப்புலவர், இளஞ் சைவப்புலவர் தேர்வுகள் பிற்போடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சி.கா.கமலநாதன், செயலாளர் செ.த.குமரன் ஆகியோரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் நடைபெறும் திகதி பின்னர் அறியத் தரப்படுமெனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.